search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.எஸ்.டி தினம்"

    ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு நாளை ஜி.எஸ்.டி தினம் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #GSTDay
    புதுடெல்லி :

    இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத சீர்திருத்தமாக ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் கடந்த 2017 ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி. வரியால் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 12-க்கும் மேற்பட்ட வரிகள் முடிவுக்கு வந்தன.

    ஜி.எஸ்.டி வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்து நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இதையடுத்து, நாளை ஜிஎஸ்டி தினமாக மத்திய அரசு கொண்டாட உள்ளது. எனவே, நாளைய தினம் பல்வேறு சிறப்பு நிகழ்சிகளுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    நிதி மந்திரி பியூஷ் கோயல், தொழில் நிறுவன கூட்டமைப்புகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி டில்லி அம்பேத்கர் பவனில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், பாஜக மந்திரி அருண் ஜெட்லி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்ற உள்ளார். #GSTDay
    ×